காகிதப்பைக்கு பணம் வசூல்: வக்கீலுக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
காகிதப்பைக்கு பணம் வசூலித்த சுவீட் நிறுவனம் வக்கீலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பாளையங்கோட்டை பர்கிட்மா நகரை சேர்ந்தவர் பரமசிவன். வக்கீலான இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சுவீட் கடையில் 2 கிலோ சுவீட் வாங்கினார். சுவீட்டுக்கு விலை ரூ.400-ம், அந்த நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகித பைக்கு ரூ.20-ம் சேர்த்து, ரூ.420-க்கு விற்பனை செய்தனர். அந்த நிறுவனத்தின் காகிதப்பைக்கு ரூ.20 வசூல் செய்ததை பரமசிவன் திரும்ப தரக்கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் ரூ.20-ஐ திரும்பத்தர மறுத்து விட்டது.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பரமசிவன், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் பரமசிவனிடம் காகிதப்பைக்கு ரூ.20-ஐ வசூல் செய்தது முறையற்ற வாணிபம், எனவே அவருடைய மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் அந்த சுவீட் நிறுவனம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும், என உத்தரவிட்டனர்.