சிறப்பு வரி முகாமில் ரூ.14¾ லட்சம் வசூல்
நெல்லை மாநகராட்சி சார்பில் நடந்த சிறப்பு வரி முகாமில் ரூ.14¾ லட்சம் வசூலானது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி 4 மண்டல அலுவலக பகுதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நேற்று நடந்தது. பாளையங்கோட்டை மண்டலம் வி.மு.சத்திரம் வார்டு 38-ல் நடந்த வரிவசூல் முகாமை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆணைகளை வழங்கினர். மேலும் இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 90 மனுக்கள் பெறப்பட்டு, ஒரு வார காலத்திற்குள் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தினார்.
நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களில் நடந்த முகாமில் ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்து 147 சொத்து வரி மற்றும் இதர வரியினங்கள் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story