சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.29¾ லட்சம் வசூல்


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.29¾ லட்சம் வசூல்
x

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.29¾ லட்சம் வசூலானது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.29¾ லட்சம் வசூலானது.

உண்டியல் வசூல்

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அவ்வாறு வருகின்ற பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைத்துள்ளனர். இந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில், ஆய்வாளர் ராமலட்சுமி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.29 லட்சத்து 87 ஆயிரத்து 618-ம், 3 1/2கிராம் தங்கமும், 58.900 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வருமானமாக கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story