திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு பாராட்டு சான்றிதழ்


திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு பாராட்டு சான்றிதழ்
x

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சங்கல்ப் திட்டம்

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலை கிடைத்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்பட செய்வதே 'சங்கல்ப்' திட்டத்தின் நோக்கமாகும்.

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழிற்கல்வி திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் திறன் மிக்கவர்களாக மாறும் போது வேலை வாய்ப்பு பெற்று அதன் மூலமாக அவர்கள் பொருளாதாரம் மேம்படுவதுடன், அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் மேம்படும். வாழ்வாதார மேம்பாட்டுக்காக 33 பிரிவுகளில் 600-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தேர்வு

திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக கமிட்டியின் தலைவராக கலெக்டர் வினீத் உள்ளார். மத்திய அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திறன் மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து அளிக்க கேட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனுபவ ரீதியாக தொழிலை கற்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால் தொழில் திறன்மிக்கவர்களை உருவாக்க முடியும் என்பது குறித்த திட்ட அறிக்கையை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை மத்திய அமைச்சகம் தேர்வு செய்ததில் இந்திய அளவில் 30 மாவட்டங்களின் திட்ட அறிக்கை தேர்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் திறன்மேம்பாட்டு பயிற்சி திட்ட அறிக்கை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் சார்பில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.

பாராட்டு சான்றிதழ்

இந்த விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் சென்றார். பின்னர் சிறந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்ததற்காக பாராட்டு சான்றிதழை, கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மந்திரி தர்மேந்திர பிரதான் கலெக்டர் வினீத்துக்கு வழங்கி பாராட்டினார்.


Related Tags :
Next Story