நாமக்கல்லில் 65 வகையான மூலிகை செடிகள் தோட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில்  65 வகையான மூலிகை செடிகள் தோட்டம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x

நாமக்கல்லில் 65 வகையான மூலிகை செடிகள் தோட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலர், மாநில மரமான பனை, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை நடப்பட்டு உள்ளன.

மேலும் இருமல், ஆஸ்துமா, சளி ஆகியவற்றை தணிக்கும் ஆடாதோடை மூலிகை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆவாரம்பூ மூலிகை, ரத்த சுத்திகரிப்பு, கண்பார்வை அதிகரிக்க மற்றும் முடி கருமைக்கு சிறந்த கருவேப்பிலை மூலிகை, விஷக்கடி, அரிப்பு, தோல் வியாதி சர்க்கரை நோய்க்கு சிறந்த சிறியாநங்கை மூலிகை, நீரிழிவு நோய், தோல்நோய் மற்றும் மூலம் நோய் ஆகியவற்றை குணமாக்கும் தொட்டாச்சுருங்கி மூலிகை உள்ளிட்ட 65 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன. இப்பூங்காவின் மூலிகை தாவரங்களை செஞ்சிலுவை அமைப்பினர் நட்டு பராமரித்து வருகின்றனர்.

இதில் செஞ்சிலுவை மாவட்ட செயலாளர் ராஜேஸ் கண்ணன், உறுப்பினர்கள் மாதையன், நாகராஜன், ஆண்டனி ஜெனிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story