தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கிரையதாரர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி அசல் ஆவணங்களை பெறலாம்-கலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கிரையதாரர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி அசல் ஆவணங்களை பெறலாம்-கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பதிவுத்துறை மூலம் இந்திய முத்திரை சட்டப்பிரிவுகள் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஈட்டுவதற்கு வசூல் பணியை முடுக்கி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முனைவு இயக்கம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தை உள்ளடக்கிய 12 சார் பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக குறைவு முத்திரை தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரை தீர்வையை சம்பந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான கிரையதாரர்கள் தங்கள் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரை தீர்வை, அசல் மற்றும் வட்டியுடன் செலுத்தி அசல் ஆவணத்தை பெற்று கொள்ளலாம். இதற்கு ஏதுவாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்திரைத்தாள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி தாசில்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு இந்த சிறப்பு முனைவு இயக்கத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story