இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன்தக்காளி மதிப்பு கூட்டு தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது


இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன்தக்காளி மதிப்பு கூட்டு தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் தக்காளி மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தொழில் மானிய நிதியை கொண்டு தக்காளி மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து வேளாண் தொழில்நுடப விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

2 நிறுவனங்கள்

இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என 2 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 உற்பத்தியாளர் நிறுவனங்களில் 1,000 பேர் உள்ளனர். மேலும் ஆரம்ப கட்ட நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெறப்பட்ட தொழில் மானிய நிதியை கொண்டு தக்காளி மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தமானது பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கையொப்பமிடப்பட்டது.

தேவைகள் அதிகரிக்கும்

இதன் மூலம் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது. விலையில் சரிவு ஏற்படும் காலகட்டத்திலும் விவசாயிகள் நிலையான வருமானத்தை பெறுவர். இதனால் ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் சஞ்சய் குமார் சிங், முதன்மை விஞ்ஞானிகள் வெங்கடகுமார், செந்தில்குமார், சங்கர், புவனேஸ்வரி, எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சிவக்குமார், சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story