ஓசூரில் சிறுதானிய கண்காட்சி கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
ஓசூர்:
ஓசூரில் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சிறுதானிய கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகளை பொதுமக்கள், இளைய தலைமுறையினரிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய கண்காட்சி நடத்தப்படுகிறது. பாரம்பரியத்தை போற்றும் வகையில் முன்னோர்கள் சிறுதானிய உணவுவகையை உட்கொண்டு வந்தனர். பொதுமக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பேசினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், பையூர் அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் சிவகுமார், ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார், டாக்டர் சண்முகவேலு, அரிமா சங்க முன்னாள் கவர்னர் ரவிவர்மா மற்றும் ஞானசேகரன் ஒய்.வி.எஸ்.ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள், தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.