வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
கடையநல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறைவாக உள்ளது. அதனை வரும் நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சண்முகம், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெகநாதன், குடும்பப் பொருள் தாசில்தார் சங்கரலிங்கம், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தேர்தல் பிரிவு மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story