கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு


கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு
x

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் மாவட்ட கலெக்டரை சந்தித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் அமைத்தல், தினசரி மார்க்கெட் நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்துதல், அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி இடவசதி, சுகாதார வசதி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனை ஏற்று நேற்று கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு திடீர் ஆய்வு பணிக்காக கலெக்டர் ஆகாஷ் சென்றார்.

பின்னர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கான நடைமுறைகள் குறித்து நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் லதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர்கள் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story