விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை;கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு எச்சரிக்கை


விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள்  மீது கடும் நடவடிக்கை;கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2023 11:45 AM IST (Updated: 6 Jun 2023 12:46 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளம்பர பலகைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களான பஸ் நிலையங்கள், ஊரக, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய வளைவுகள், பஸ் நிறுத்தங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னரே வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெற்று இருக்கவேண்டும். உரிய அனுமதி பெற்றபின் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் அனுமதி ஆணை மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் மற்றும் அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

மேலும், கோவில், மசூதி, தேவாலயம் போன்ற மக்கள் வழிபடும் இடங்கள், வரலாற்று புராதனச் சின்னங்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது காவல்துறை மற்றும் உள்ளாட்சி மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story