மாவநல்லா உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம்-கலெக்டர் அம்ரித் திறந்து வைத்தார்

மாவநல்லா உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம்-கலெக்டர் அம்ரித் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாவநல்லா உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம்-கலெக்டர் அம்ரித் திறந்து வைத்தார்

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மசினகுடி அருகே மாவநல்லா அரசு உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உடற்பயிற்சி கூடத்தை ஆதிவாசி மக்கள் மட்டும் இன்றி பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மசினகுடி பகுதி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு தயாராகும் வகையில் தேவையான புத்தகங்கள் பண்பாட்டு மையத்தில் உள்ளது. இதை பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story