தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; தேனி கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு தமிழக அரசு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
எனவே, நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலம் தங்களின் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள், பொதுமக்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story