மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
கோட்டூர் அருகில் உள்ள செருவாமணி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் வழிகாட்டுதலோடு 9-ம் வகுப்பு மாணவர்கள் சுதர்சன், கீர்த்திவாசன் ஆகியோர் " கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள செருவாமணி மற்றும் ராமநாதபுரம் கிராமங்களில் நெல் அறுவடையில் விவசாயியின் மீளா துயரமும், அதற்கான தீர்வும்" என்ற ஆய்வறிக்கையை தூத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான மாநாட்டில் சமர்பித்தனர். இந்த கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு அகில இந்திய அளவில் அடுத்த மாதம் (ஜனவரி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ள தேசிய மாநாட்டில் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்டக்கல்வி அலுவலர் மாதவன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், மாநில துணைத்தலைவர் சேதுராமன், மாவட்ட நிர்வாகி பொன்முடி, ஊராட்சி மன்ற தலைவர் செருவை கார்த்திக் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இதுகுறித்து மாணவர்கள் சுதர்சன், கீர்த்திவாசன் ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குறுவை நெல் அறுவடையில் விவசாயிகள் மழை காரணமாக ெநல்லை விற்க முடிவதில்லை. இது எங்களை மிகவும் பாதித்தது. எனவே அறுவை எந்திரத்துடன் கூடுதலாக எந்திரம் அமைத்து காற்று மூலம் நெல்லை ஓரளவு உலர்த்தி வெளியில் கொட்ட முடியும் என நாங்கள் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு உதவிய தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.