மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு


மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
x

மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் முதல் இடங்களை பிடித்த 8 அரசு பள்ளிகளை சேர்ந்த 16 மாணவ- மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்று வந்திருந்தனர்.

வெற்றிபெற்ற அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராமகிருஷ்ணன், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகேஷ், கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பன்னகசயனன், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமாவதி, வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுலகிருஷ்ணன், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சவிதா, தாமரைபாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் சூர்யா ஆகியோர் தாங்கள் பெற்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவ- மாணவிகள் மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டுமென கலெக்டர் வாழ்த்தினார். மேலும் மாணவ- மாணவிகள் நல்ல ஊட்டச்சத்து சாப்பாடுகளை சாப்பிட வேண்டும் எனவும், ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் மாணவிகள் வளர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கல்வி அலுவலர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மகளிர் திட்ட இயக்குனர் நாநிலதாசன், உதவி திட்ட அலுவலர் (பள்ளி கல்வித்துறை) துரைவேல், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story