வரலாற்று ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்


வரலாற்று ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:30 AM IST (Updated: 31 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் வரலாற்று ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வரலாற்று ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவணங்கள்

அரசாணை எண்:1062 கல்வித்துறை 25.07.1990 தேதியின் கீழ் அமைக்கப்பட்ட குழு தனிநபர்கள், அரச பரம்பரையினர் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பண்டைய மற்றும் வரலாற்று சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சேகரித்து ஆவணப்படுத்துகிறது.

இந்த குழு தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையரின் கீழ் செயல்படுகிறது. இந்த குழுவின் நோக்கம், செயல்பாடு, தமிழ்நாட்டில் தனியார் வசம் கிடைக்கப்பெறும் இத்தகைய பதிவுகளை புதுடெல்லி இந்திய ஆவண காப்பகத்தில் உள்ள தனியார் ஆவணங்களுக்கான தேசிய பதிவேட்டுடன் இணைத்திடுதல் ஆகும்.

தகவல் தெரிவிக்கலாம்

தமிழக அரசு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பல்வேறு ஆதாரங்களிலிருந்து தனித்துவமான வரலாற்று ஆவணங்களின் தனிப்பட்ட பதிவு சேகரிப்பை திறம்பட கண்காணிப்பதற்கும், மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. எனவே தனிநபர், தனியார் நிறுவனங்கள், அரச பரம்பரை குடும்பங்கள், மடங்கள், தேவாலயங்கள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பிற இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் விவரங்களை மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கலாம். அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களிடம் இதுதொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story