சேலம் அருகே விபத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு கலெக்டர் ஆறுதல்


சேலம் அருகே விபத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு கலெக்டர் ஆறுதல்
x
தினத்தந்தி 3 July 2023 1:14 AM IST (Updated: 3 July 2023 2:21 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே விபத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டம் செட்டிச்சாவடி ஊராட்சியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி கலைவாணி. கடந்த மாதம் 29-ந்தேதி விபத்தில் இறந்தனர். இவர்களுக்கு தனம் (வயது 12), பூர்ணி (10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் விநாயகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளை கலெக்டர் கார்மேகம் நேரில் சந்தித்து தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் என்று ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story