ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் மதிய உணவு தரமானதாகவும், சுவையாகவும் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து தரமான சத்தான உணவுகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கிட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்த கலெக்டர் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடங்களை முறையான அனுமதி பெற்று இடித்து அகற்றிடவும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும், போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசிந்தாமேரி, ஆசிரியர் லூர்துமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story