மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு


மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆற்காடு மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் உள்ள சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு மதிய உணவாக காய்கறி சாதம் வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் வடை தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை மாவட்ட கலெக்டர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் முரளி, தாசில்தார் சுரேஷ், விடுதி காப்பாளர் அன்பரசு மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.


Next Story