பேரிடர் மீட்பு படையினருடன் கலெக்டர் ஆலோசனை


பேரிடர் மீட்பு படையினருடன் கலெக்டர் ஆலோசனை
x

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு படையினருடன் கலெக்டர் லலிதா ஆலோசனை மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு படையினருடன் கலெக்டர் லலிதா ஆலோசனை மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடரப்ாக மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று கடற்கரை கிராமங்களில் ரோந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பூம்புகார், வானகிரி ஆகிய கிராமங்களுக்கு சென்றார். வானகிரி மீனவ கிராமத்தில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் அந்தப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டார். இதனை அடுத்து பூம்புகார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டு, பூம்புகார் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்வையிட்டார்.

தேவையான நடவடிக்கைகள்

பின்னர் இதுகுறித்து கலெக்டர் லலிதா நிருபர்களிடம் கூறுகையில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்' என்றார்.

அப்போது அவருடன் பேரிடர் மேலாண்மை படை கமாண்டர் பிரமோத்குமார், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story