மாடு இறந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மாடு இறந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மாடு இறந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அவிழ்த்து விடப்படும் காளைகளை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுற்றி நின்று தட்டி உற்சாகப்படுத்துவார்கள். கூட்டத்தின் நடுவே பாய்ந்து ஓடும் காளைகளால் ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த விழாக்களில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.
எனவே முறையான விதிகளை பின்பற்றாவிட்டால் விழாவுக்கு தடை விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வேலூர் அணைக்கட்டு அருகே கோவிந்தரெட்டிபாளையத்தில் ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் அந்த காளை இறந்து விட்டதாக விசாரணையில் தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.