தாட்கோ நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது-விமான வாடிக்கையாளர் சேவைக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்,கலெக்டர் தகவல்


தாட்கோ நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது-விமான வாடிக்கையாளர் சேவைக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்,கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கப்படுகிறது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது விமானநிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை பெற விரும்புபவர்களின் வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதெனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.இப்பயிற்சினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும். இந்த பயிற்சியில் சேரவிரும்பும் தகுதியுள்ள ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் தாட்கோ www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story