விமான நிலையத்தில் பணிபுரிய ஆதிதிராவிட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விமான நிலையத்தில் பணிபுரிய ஆதிதிராவிட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் பணிபுரிய ஆதிதிராவிட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தொிவித்துள்ளாா்.

கடலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மேலும் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story