ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை கலெக்டா் பாா்வையிட்டார்
சீர்காழி சட்ைடநாதா் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை கலெக்டா் பாா்வையிட்டார்
திருவெண்காடு;
சீர்காழி சட்ைடநாதா் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை கலெக்டா் பாா்வையிட்டார்
சட்டைநாதர்கோவில்
சீ்ர்காழியில் பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை அமைக்க கோவிலின் ஒரு பகுதியில் பள்ளம் அமைக்க பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருந்த 22 ஐம்பொன் சிலைகள், விளக்குகள், பூஜை ெபாருட்கள், மற்றும் பழங்கால செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த சிலைகள், பூஜைபொருட்கள், மற்றும் பழங்கால செப்பேடுகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு செய்த பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிடம் கேட்டறிந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேட்டுக்கொண்டார்.ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நாகை அருங்காட்சியக காப்பாளர் மணிமுத்து, தாசில்தார் செந்தில்குமார், கோவில் நிர்வாகி செந்தில், கோவிலின் சட்ட ஆலோசகர் வக்கீல் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி 20- வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று பார்வையிட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.