இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு


இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு
x

வள்ளியூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.1.77 கோடி மதிப்பில் 35 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. நேற்று அந்த கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது செயற்பொறியாளர் முருகன், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, ராஜேஸ்வரன், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், சாந்திகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராணி, ஓவர்சியர் வெண்மதி, ஊராட்சி செயலர் இ.மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதி மூலம் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அங்குள்ள சத்துணவுக்கூடம், மாணவர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் முதலிடம் பெற்ற 8-ம் வகுப்பு மாணவன் முத்து சுரேந்தரை பாராட்டினார். நிகழ்ச்சியில் குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story