தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
கபிஸ்தலம் அருகே தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்கால் 5கிலோமீட்டர் தூரத்துக்கும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் ராஜதேவி ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story