கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கொத்தங்குடி ஊராட்சியில் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக்கரை ஓரங்களில் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். மேலும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண்- 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது காவிரி வடி நிலக்கோட்டை செயற்பொறியாளர் இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story