ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு
தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை காந்திஜிசாலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், தஞ்சை பர்மாபஜார் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், தஞ்சை ரெயிலடியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள போக்குவரத்து பூங்காவில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், தஞ்சை மேம்பாலம் அருகே பார்வைதிறன் குறையுடையோருக்கான பள்ளி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மேலும் தஞ்சை காந்திஜிசாலையில் கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்த நிழற்குடையை பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.