அரசு பள்ளிகளில் வகுப்பறை, சமையல் கூடம் கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு
கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் வகுப்பறை, சமையல் கூடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் வகுப்பறை, சமையல் கூடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வகுப்பறை கட்டும் பணி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிப்பறை கட்டிடம் கட்டும் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.98 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணியையும், எரவாஞ்சேரி ஊராட்சி காலனி குளத்தில் ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
எரவாஞ்சேரி அருகே காருதாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.95 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணி, ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி, எரவாஞ்சேரி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி, பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணி, ஊராட்சியில் உள்ள நூலகம் ரூ.42 ஆயிரம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் தேவூரில் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் கடுவையாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேகர், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் பாலச்சந்திரன், கிரிதரன் ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.