பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு


பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு
x

மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு

நாகப்பட்டினம்

கலெக்டர் அருண்தம்புராஜ், நாகூர் பட்டினச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் புயல் பாதுகாப்பு மையத்தில் உள்ள பொதுமக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்

வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. கடற்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகூர் பட்டினச்சேரி பகுதியில் கடல்அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க விரைவில் கருங்கற்கள் தடுப்புச்சுவர் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story