ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் கலெக்டர் ஆய்வு
ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்ெகாண்டார்். அவரை சிமெண்டு ஆலை தலைவர் முத்து செல்வன் வரவேற்றார். சிமெண்டு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் ஆலங்குளம் எதிர்கோட்டை கல்லமநாயக்கர் பட்டி ரேஷன் கடை, கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனை, குண்டாயிருப்பு கிராமத்தில் திருநங்கைகளுக்கு குடியிருக்க கட்டிவரும் வீடுகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். இந்த வீடுகளை 100 நாட்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். ஆய்வின்போது தாசில்தார் ரெங்கநாதன், மண்டல துணை தாசில்தார் அகதீஸ்வரன், வெம்பக்கோட்டை தாலுகா வினியோக அதிகாரி சிவானந்தம், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அதி காரிகள் செல்வராஜ், சத்தியவதி. ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் கபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.