அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டு அரசினர்பள்ளியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது 12-ம் வகுப்பு மாணவர்களை இயற்பியல் பாடத்தையும், 7-ம் வகுப்பில் கணக்கீடுகளையும், 10-ம் வகுப்பு மாணவர்களிடத்தில் செய்யுள் மற்றும் குறள் மனப்பாடப் பகுதிகளை ஒப்பிக்க சொன்னார். மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக முடிவெட்டி இருந்தனர். அதற்காக ஆசிரியர்களை பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் நாகலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
இதனையடுத்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சான்றுகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து சான்றிதழ்களையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி கோப்புகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார் மற்றும் துணை தாசில்தார்கள்அலுவலர்கள் உடன் இருந்தனர்.