அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, படுக்கை வசதிகள், மருந்து பொருட்கள் இருப்பு அறை, பச்சிழம் குழந்தைகள் பிரிவு மற்றும் குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள், தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும், மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேல்சிகிச்சை தேவைபடுவோருக்கு உரிய நேரத்தில் வேலூர், சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும் என மருத்துவ அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மாரிமுத்து, தலைமை மருத்துவர் குமரவேல், அறுவை சிகிச்சை மருத்துவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.