கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு
கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு செய்தார்
திருச்சி
திருச்சி கொட்டப்பட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று காலை திடீரென இந்த முகாமிற்கு சென்றார். முகாமில் வசிப்பவர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்த கலெக்டர் குறைகளை உடனடியாக களைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story