நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்பேரில், மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள வில்லியநல்லூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

எச்சரிக்கை

அங்கு அவர் நெல்லின் ஈரப்பதம், எடை அளவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் கொடுக்கும் நெல்லை எடைபோடும் போது விவசாயிகள் அறியும் வகையில் இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் திறந்தவெளியில்அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த அலுவலர்கள் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகளை கிடங்குக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு தனியாக பணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story