பிளவக்கல் பெரியாறு அணையில் கலெக்டர் ஆய்வு
பிளவக்கல் பெரியாறு அணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் இருப்பு, வரத்து கால்வாய் ஆகியவற்றை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். அத்துடன் மதகுகளை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ராம்நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அங்குள்ள அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்டார். அத்திகோவிலில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story