வளம் மீட்பு பூங்காவில் கலெக்டர் ஆய்வு


வளம் மீட்பு பூங்காவில் கலெக்டர் ஆய்வு
x

கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா உள்ளது. இங்கு மக்காத குப்பைகளை எரிப்பதற்காக ரூ.40 லட்சம் செலவில் புதிய எந்திரம் அமைக்கப்பட்டது. 21 வார்டுகளில் இருந்து தினமும் 4 டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வளம் மீட்பு பூங்காவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணி, குப்பைகள் நவீன எந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பூங்கா வளாகத்தில் கலெக்டர் சோலை மரக்கன்றை நடவு செய்தார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, செயல் அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Next Story