தூத்துக்குடி விமான நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடி விமான நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொலைதொடர்பு மையத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொலைதொடர்பு மையத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைதொடர்பு மையத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக பறக்க விமானி சரியான பாதையில் இருப்பதை உறுதி செய்யும் பணியை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ரூ.380 கோடியில் திட்டங்கள்

பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவி மூலம் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 முதல் 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த ரூ.380 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

ஆய்வின் போது கட்டுமான பொறியியல் பிரிவு பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் அணில்குமார், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story