வேளாண்மை சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு


வேளாண்மை சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளியில் வேளாண்மை சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை உழவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மண்வள பரிசோதனை மையம் மற்றும் வேளாண்மை சேமிப்பு கிடங்கை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு வேளாண்மை - உழவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் வேளாண்மை சேமிப்பு கிடங்கில் 10 விவசாயிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான விதைகள், ஸ்பிரேயர்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், உதவி இயக்குனர் (வேளாண்மை) சுரேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story