வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
தலைஞாயிறு பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நத்தப்பள்ளம் ஊராட்சியில் ரூ.23.56 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியையும், நீர்முளை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியையும், துளசாபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் பேபி, தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடாசலம், ரவிச்சந்திரன்، ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்،
---
Related Tags :
Next Story