வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
கலெக்டர் ஆய்வு
நாைக மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ்அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், புஷ்பவனம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் பார்வையிட்டார்.
புதிய வகுப்பறை
கரியாப்பட்டினம் ஊராட்சி செண்பகராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும்; திட்டத்தின் கீழ் தலா ரூ.26 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள், கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்தும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் உள்ள கிராம உழவர் சந்தையையும் கலெக்டர் அருண் தம்புராஜ்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, குஜாரத் கெமிக்கல் மேலாளர் சுந்தர்ராஜன் , வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.