தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு


தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமருகல் ஒன்றித்திற்குட்பட்ட பில்லாளி பாசன வாய்க்கால் மற்றும் உத்தூர் பாசன வாய்க்கால், பில்லாளி பாசன வாய்க்கால், தோட்டக்குடி வாய்க்கால், தோட்டக்குடி பி1 வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story