பாசன கால்வாய்களை கலெக்டர் ஆய்வு


பாசன கால்வாய்களை கலெக்டர் ஆய்வு
x

அருப்புக்கோட்டை அருகே பாசன கால்வாய்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாசன கால்வாய்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசு மாவட்டந்தோறும் நீர்நிலைகளை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிகப்படியான நீர் சேமிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் உயர்கிறது.

இந்த திட்டம் விருதுநகர் மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க இத்திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை இதை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று அருப்புக்கோட்டை தாலுகா கட்டங்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்ட பாசனக்கால்வாயை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பாளருமான ஆனந்த குமார் ஆய்வு நடத்தினார்.

நிலத்தடி நீர் உயர்வு

ஆய்வின் போது மாவட்டத்தில் அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் 16 ஊருணிகள், 21 பாசனக்கால்வாய்கள், 10 வரத்துக்கால்வாய்கள் என மொத்தம் 47 பணிகள் செய்யப்பட்டுள்ளது.

வறட்சி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், அதிக நீரை தேங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story