ஏரி நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் ஆய்வு
பூதூர், ஓட்டேரியில் ஏரி நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
பூதூர், ஓட்டேரியில் ஏரி நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. அதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் வேலூர் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து இல்லை.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஓட்டேரி ஏரியை நேற்று அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டார். அவற்றில் கற்கள், மண் மற்றும் தேவையற்ற பொருட்கள் கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தி நீர்வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம், கலெக்டர் கூறினார். மேலும் ஓட்டேரி ஏரிக்கு நீர்வராததற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் பிரபுகுமார்ஜோசப், மாநகர நலஅலுவலர் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கால்வாய்கள் ஆக்கிரமிப்பு
அதைத்தொடர்ந்து ஊசூர் அடுத்த பூதூரில் உள்ள பெரிய ஏரி, ரெண்டேரிகொடி ஏரி மற்றும் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலம் தொடங்கிய நிலையில் ஏரிக்கு நீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு இல்லாமல் உள்ளதா எனவும், மழை வெள்ளம் வந்த பிறகு தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார், ஊசூர் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், கிராம நிர்வாக அலுவலர் தமிழ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.