வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் அருகே விளமல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் சேர்க்கை முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வழங்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பங்கள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். வாக்காளர் சேர்க்கைக்கு வந்த விண்ணப்பதாரர்களிடம் அருகில் உள்ள புதிய வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story