சிட்கோ தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு
மல்லகுண்டா ஊராட்சியில் சிட்கோ தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சிட்கோ தொழிற்சாலை அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான இட அளவுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், சிட்கோ தொழில்நுட்ப அதிகாரிகள் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story