மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார். ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story