பொங்கலுக்கு வழங்க அறுவடையாகும் கரும்புகளை கலெக்டர் ஆய்வு


பொங்கலுக்கு வழங்க அறுவடையாகும்  கரும்புகளை கலெக்டர் ஆய்வு
x

பொங்கலுக்கு வழங்க அறுவடையாகும் கரும்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

மதுரை

மேலூர்,

பொங்கல் பரிசுடன் சேர்த்து முழு கரும்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் கிராமத்தில் கரும்பு கொள்முதல் செய்வதற்காக மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் கரும்பு பயிரிட்டுள்ள தோட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மேலூர் ஆர்.டி.ஓ. பிரதவுஸ்பாத்திமா, மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், மேலூர் தாசில்தார் சரவணபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story