வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் அரசியல் கட்சிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் 410 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்களின் பணிக் காலம், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 36 வாக்குப்பதிவு எந்திரங்களையும் 68 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் என மொத்தம் 552 வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய உத்தரவின்படி பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்ப ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, தனித்தாசில் தார ்மாரிச்செல்வி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.