கூடலூர் நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு


கூடலூர் நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 July 2022 10:13 PM IST (Updated: 7 July 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, 1-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெரு, 6-வது வார்டு அருந்ததியர் ஓடை தெரு ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தல், லோயர்கேம்பில் ரூ.37 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கூடலூரில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று கூடலூருக்கு வந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன், நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ச்சுனன், நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, மேலாளர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story